Posts

The Terminator too

Image
The Terminator too எனக்கு சினிமாவின் மீது தீராக்காதல்  இருந்தாலும் இந்த காதல் வர தூண்டு கோலாக இருந்தவர் பற்றி நான் சொன்னால் நீங்கள் ஆர்ச்சரியப் படுவீர்கள் . அவர் ஊரம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் என்னுடைய கொல்லுப்பாட்டி   தான். 90களிலே எண்பது வயதை நேருங்கி கொண்டிருந்தாள். பிரிட்டிஷ் இந்தியாவையும் சுதந்திர இந்தியாவையும் பார்த்தவள். ஒல்லியான உருவம் கை கால் முதல்  நெற்றிப்பொட்டு   வரை பச்சை குத்தியிருப்பாள். சுற்றுலா செல்வதிலும்  சினிமா பார்ப்பதிலும் அலாதி பிரியம் கொண்டவள். என் கொல்லுப்பாட்டிக்கு சேவகனாகவே சினிமா தியேட்டர்க்கு நான் சென்றேன் ஆனால் கொல்லுப்பாட்டியோ சினிமா எனும்  மாய திரையை எனக்கு காண்பித்து தீராக்காதல்  கொள்ள செய்தாள்.. அப்போது நான் சற்று   வ ள ர்ந்திருந்தேன் ,  உடலால் மட்டும் அல்ல சினிமா பார்ப்பதிலும் தான். அதுவரை என் ஊரில் உள்ள தியோட்டரில் சினிமா பார்த்த நான் நகரத்திற்கு சென்று சினிமா பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் சினிமா மட்டும் பார்த்து கொண்டிருந்த எனக்கு ஹாலிவுட் சினிமா அறிமுகமானது. மர இருக்கையில் காற்றாடிக்கு அருகில...

ஆயிரத்தில் நானும் ஒருவன்..

Image
                                              ஆயிரத்தில் நானும் ஒருவன்.. 90களின் ஆரம்பத்தில் திரைச்சீலை விலகி சினிமா என்னும் மாய திரையின் உள்ளே நான் மதி மயங்கி கிடந்த காலம் அது.. சினிமா என்பது ஒரு நிமிடத்திற்குள் 24 பிரேம்களில் சொல்லப்படும் உண்மை என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். ஆனால் ஹாலிவுட்டின் இயக்குனரான பிரைன் டி பால்மா,ஒரு நிமிடத்தில் 24 முறை பொய் சொல்வதற்கு பெயர் தான் சினிமா என்கிறார்.என்னை பொறுத்தவரை சினிமா என்பது ஒரு நிமிடத்திற்குள் 24 பிரேம்களில் 24 முறை முக்காலமும் செல்லும் மாய கண்ணாடி என்பேன்.இன்று நான் பார்க்கும் பல விஷயங்களை அன்றே என் கண் முன்னே   காட்சிப்படுத்தியதும்  இதுவே.. நான் ஒரு ஆற்றங்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆற்றையும்  பரிசலையும்  தவிர வேறு எதுவும் கண்டதேயில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் தண்ணீரை மட்டுமே கொண்ட கடல், பிரமாண்டமான பாய்மரக் கப்பல், இரவும் பகலுமாக செல்லும் கடல் பயணம், பீரங்கி,தாய் நாட்டின் விடுதலைக்...

நான் பேசும் சினிமா (Filmme talkies)

Image
நான் பேசும் சினிமா                                                           (Filmme Talkies)             சினிமா என்ற மூன்றெழுத்து மந்திரச்சொல் எத்தனை எத்தனை விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவோ மாற்றங்களை நமக்குள் விதைத்திருக்கிறது.பல நாயகர்களையும் தேவதைகளையும் நமது  மனதில்  கலந்து  வாழச்செய்கிறது இந்த சினிமா.. சினிமா ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும்  கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.. சினிமா நம் இரு  புலன்களின்  வழியாக உள்ளே சென்று இரத்த அணுக்களின் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தையும் மூளையையும்  புத்துணர்ச்சிப்  பெற செய்து  ஐம்புலன்களையும்  இன்புறச்செய்து நம்மை தம் வச படுத்திக்கொள்வதே சினிமாவின் பிரதான வேலை. சினிமா  ஏற்படுத்தும்  இரசாயன மாற்றத்தின் விளைவாக தான் அன்பு, பாசம், நட்பு, காதல்...