The Terminator too

The Terminator too

எனக்கு சினிமாவின் மீது தீராக்காதல் இருந்தாலும் இந்த காதல் வர தூண்டு கோலாக இருந்தவர் பற்றி நான் சொன்னால் நீங்கள் ஆர்ச்சரியப்படுவீர்கள். அவர் ஊரம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் என்னுடைய கொல்லுப்பாட்டி   தான். 90களிலே எண்பது வயதை நேருங்கி கொண்டிருந்தாள். பிரிட்டிஷ் இந்தியாவையும் சுதந்திர இந்தியாவையும் பார்த்தவள். ஒல்லியான உருவம் கை கால் முதல் நெற்றிப்பொட்டு வரை பச்சை குத்தியிருப்பாள். சுற்றுலா செல்வதிலும் சினிமா பார்ப்பதிலும் அலாதி பிரியம் கொண்டவள். என் கொல்லுப்பாட்டிக்கு சேவகனாகவே சினிமா தியேட்டர்க்கு நான் சென்றேன் ஆனால் கொல்லுப்பாட்டியோ சினிமா எனும் மாய திரையை எனக்கு காண்பித்து தீராக்காதல் கொள்ள செய்தாள்..

அப்போது நான் சற்று  ர்ந்திருந்தேன், உடலால் மட்டும் அல்ல சினிமா பார்ப்பதிலும் தான். அதுவரை என் ஊரில் உள்ள தியோட்டரில் சினிமா பார்த்த நான் நகரத்திற்கு சென்று சினிமா பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் சினிமா மட்டும் பார்த்து கொண்டிருந்த எனக்கு ஹாலிவுட் சினிமா அறிமுகமானது. மர இருக்கையில் காற்றாடிக்கு அருகில்

 
அமர்ந்து சற்று மங்கலான திரையில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த எனக்கு முழுவதுமாக குளிர்ருட்டபட்ட அரங்கம், குஷன் இருக்கைகள், பளிச்சென்று கண்ணாடி போன்ற திரை, நவின ஒலி கருவிகளில் இசை என்று எல்லா மாற்றங்களும் என்னை ஈர்த்தது..

மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களுகும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருப்பது உண்மைதான். அந்த இடைவெளியை வெற்றிகரமாகத் தாண்டி பகுத்தறிவு என்கிற நிலப்பரப்பின் மீது குதித்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. இப்படித்தான் நான் அயல் சினிமா என்கிற பரந்த  நிலப்பரப்பின் மீது குதித்தேன். ஹாலிவுட் சினிமாவின் மூலமாக எனக்கு அயல்நாட்டு சினிமா எல்லாம் அறிமுகமானது..

முதல் சினிமாவிலேயே  ஹாலிவுட் என்னை விழுங்கி  தன்னுள் வைத்துக்கொண்டது. அது   டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே சினிமா மூலம் தான். இந்த சினிமாவை பார்த்த  பிரமிப்புலிருந்து மீளவே சில நாட்கள் பிடித்தது.
டெர்மினேட்டர் என்ற புதுவகை இயந்திர மனிதர்கள் உலகில் பிரவேசித்து நல்லவர்களை காப்பாற்ற ஒன்றும் அழிப்பதற்கு இன்னொன்றுமாய் பூமியில் தனது வேலையை செய்கிறது. கடைசியில் எப்படி அறம்  வெற்றி கொள்கிறது என்பதே கதை. அடேயப்பா முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எப்படி இம்மாதிரியான ஒரு கற்பனை என்று என்னும் போது இன்றும் நான் திகைத்துப்போகிறேன்..

கதை என்ற கற்பனை மீறியது இதில் வரும் காட்சிகள். ஈ என் வாயின் வழியே உள்ளே நுழைந்து காதின் வழியாக வெளியே வந்தாலும் கூட தெரியாத அளவிற்கு தன்னிலை மறந்து இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்தேன். ஜேம்ஸ் கேமரூன்-யின் கற்பனை காட்சி அமைப்பை பார்த்து திக்குமுக்காடி போனேன்..


அட என்னடா இவன் கெஞ்சம் ம்ம் என்று கேட்டா ஜேம்ஸ் கேமரூன்-யை எல்லாம் அன்றே தெரிந்தவன் போல அண்ட புளுகு புளுகுரான் என்று நீங்கள்
நினைக்க வேண்டாம். டைட்டானிக் சினிமா தமிழகத்திற்கு வந்து இவர் பெயர் பிரபலம் அடைந்திருந்தாலும் கூட ஒரு தமிழ் சினிமாவில் காமெடி சீனில் நடிகர் விவேக் சொல்லித்தான்  ஜேம்ஸ் கேமரூன் பெயரே எனக்கு தெரியும்..



இந்த டெர்மினேட்டர் 2 சினிமாவை பார்த்து விட்டு நான் என் பள்ளி நண்பர்களிடம் இந்த சினிமாவின் கதையும் காட்சிகளையும் விவரித்தேன் அவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். இந்த கதையை திரும்ப திரும்ப சொல்லிக் கேட்டார்கள் நானும் கதையையும் காட்சிகளையும் சொல்லிச் சொல்லி நான் ஒரு கதை சொல்லியாகவே மாறிவிட்டேன்..

Comments