நான் பேசும் சினிமா (Filmme talkies)

நான் பேசும் சினிமா
                                                         (Filmme Talkies)
           
சினிமா என்ற மூன்றெழுத்து மந்திரச்சொல் எத்தனை எத்தனை விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவோ மாற்றங்களை நமக்குள் விதைத்திருக்கிறது.பல நாயகர்களையும் தேவதைகளையும் நமது மனதில் கலந்து  வாழச்செய்கிறது இந்த சினிமா..




சினிமா ஒவ்வொரு 
மனிதனுக்குள்ளும் 
கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..

சினிமா நம் இரு புலன்களின் வழியாக உள்ளே சென்று இரத்த அணுக்களின் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தையும் மூளையையும் 
புத்துணர்ச்சிப் பெற செய்து ஐம்புலன்களையும் இன்புறச்செய்து நம்மை தம் வச படுத்திக்கொள்வதே சினிமாவின் பிரதான வேலை. சினிமா ஏற்படுத்தும் இரசாயன மாற்றத்தின் விளைவாக தான் அன்பு, பாசம், நட்பு, காதல், காமம்,வீரம், அரசியல், புரட்சி,மாற்று சிந்தனை போன்ற பல  உணர்வுகள் தூண்டப் படவும் புத்துணர்ச்சிப் பெறவும் செய்கிறது..

சினிமா பலபரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தன்னைத் தானே செதுக்கிக் கொண்டும் பல உருவங்களின்  வழியாக நம்மை வந்து அடைந்தாலும் நம் கைக்குள்ளே அடங்கியேப் போனாலும் நம் வாழ்வில் இருந்து நிரந்தரமாக பிரித்தெடுக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிப்போனது இன்று. 
அப்படிப் பிரித்தெடுக்கும் பட்சத்தில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் சற்று குறுகிவிடும்..

சினிமாவில் பல வகை உண்டு உதாரணமாக தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் மொழி சினிமாக்கள் நவரசம்  கொண்ட சினிமா என்று சொல்லலாம் ஆனால் இது மட்டும் சினிமா அல்ல. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழும் மக்கள்,அவர்களின் கலாச்சாரம், 
அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ,வலி போன்றவற்றை இயல்பு  மாறாமல் மொழி அவசியம் இல்லாமல் எடுத்துக்காட்டும் சினிமாவை தான் உலகத் தரம் வாய்ந்த சினிமா அல்லது உலக சினிமா  என்று கூறுவார்கள். அதேபோல உலகத்தில் நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கற்பனைக் கூடச் செய்து பார்க்க முடியாத பல விசயங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வைப்பதும் ஒரு வகை சினிமா..

இப்படிப் பல வகையில் என்னை ஆட்க்கொண்ட சினிமாவை என் வாழ்வில் எப்படி எல்லாம் பார்தேன் ரசித்தேன் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அதுவே நான் பேசும் சினிமா ..

Comments

  1. வாழ்த்துகள் தலைவரே..

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தலைவரே.. நாம் பேசிய, பார்த்த யாவற்றையும் பகிருங்கள்.. படிக்க காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மச்சி...

    ReplyDelete

Post a Comment